செய்முறை வடிவமைப்பு /STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) செயல்திட்டம்
அறிமுகம்
தொடக்கமாக, சுற்றுச்சூழல் பொறியியல் என்றால் என்ன என்ற வீடியோவை பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=ZdYnTbgwVis
பிறகு, பொறியியலில் pH எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து ஒரு விவாதத்தை தொடங்கவும் சுற்றுப்புற சூழல் மற்றும் ரசாயன பொறியியலாளர்கள் பொருட்களை காரத்தன்மை கொண்டதா அல்லது அமிலத்தன்மை கொண்டதா, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். மின் பொறியியலாளர்கள் பாட்டரிகளை வடிவமைக்கிறார்கள். ரசாயன பொறியியலாளர்கள் மருந்திலிருந்து சோப்பு வரை, பசையிலிருந்து பபுள் கம் (Bubble Gum) வரை pH மதிப்பை உபயோகித்து எல்லாவற்றையும் வடிவமைக்கிறார்கள். நகரங்கள், தொழிற்சாலைகளில், சிவில் பொறியியலாளர்கள் pH மட்டங்களை பேணி தண்ணீர், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளை வடிவமைக்கிறார்கள்.
பின்வரும் செய்பணியிலும், மாணவர்களை செய்பணி வடிவமைப்பு முறைகளை பின்பற்றும்படி ஊக்குவிக்கவும். அவர்களுக்கு தெரியவில்லை என்றால் செய்பணி முறைகளை விவரிக்கவும் அல்லது நேரம் இருந்தால், இந்த வீடியோவை காண்பிக்கவும்.
https://www.youtube.com/watch?v=fxJWin195kU.
பகுதி – 1 – திட்டமிடுதல் மற்றும் pH குறீயீடு சுட்டியை உருவாக்குதல்
இயற்கையான pH சுட்டிகளை உருவாக்கவும், அதை கொண்டு பல pH மட்டங்களில் பயிர்களின் வளர்ச்சியை ஆய்வு செய்யவும் ரசாயன மற்றும் சுற்றுபுற சூழல் பொறியியலாளர்கள் சந்திக்கும் முக்கியமான சவால்களை மாணவர்களிடம் விவாதிக்கவும். மேலும், அமில மற்றும் காரத்தன்மையின் ஆபத்தான தாக்கங்களையும், ஆபத்துக்கான காரணிகளையும் அதனிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக பொறியியலாளர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கவும். அமில மழை
https://www.youtube.com/watch?v=Nf8cuvl62Vc
தொடர்பான இந்த வீடியோவுடன் நிறைவு செய்யவும்
குழுக்களாக பிரிந்து கருத்து செறிவு மிக்க விவாதம் நடத்த மாணவர்களை ஊக்குவிக்கவும். மாணவர்கள் முதலில் தங்கள் முன் இருக்கும் பிரச்னையை புரிந்து கொண்டு, பிறகு செயல் முறையை பற்றி திட்டமிட வேண்டும்.
திட்டமிடும் போது, மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை செய்து முடிக்க, குழு உறுப்பினர்களிடையே பணியை சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும்.
- குழுக்கள் தனித்தனியாக pH சுட்டியை தயாரித்து, பிறகு, அதன் துல்லியத்தன்மையை ஆயத்த சுட்டியுடன் ஒப்பிட்டு மதிப்பிட வேண்டும்.
- அவர்கள் கூர்ந்து கவனித்த தகவல்களை செய்ப்பணி புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்.
- மூன்று பாட்டில்களிலும்/ஜாடிகளிலும் அ-அமிலம், ஆ-நடு நிலை, இ-காரம் என்று, முறையே அதன் pH அளவுகளையும் லேபிலில் குறிப்பிட வேண்டும்.
- தேவையான pH மட்டங்களை பெற மாணவர்கள் மூன்று பாட்டில்களின் தண்ணீரில் வினீகரின்(Vinegar) அளவையும், ஆப்ப சோடா அளவையும் தக்கவாறு சரி செய்ய வேண்டும். அமிலத்தன்மையுள்ள தண்ணீரால் பயிறுக்கு ஏற்படும் பாதிப்பு, நல்ல பயிர் வளர்ச்சிக்கு சரியான pH அளவு, மண்ணின் வளத்தை மாசு எப்படி தாக்குகிறது என்பது குறித்து அறிந்து கொள்வதே இந்த செய்பணியின் நோக்கம்.
- குழுக்கள் பயிரின் வளர்ச்சியை 2 வாரங்களுக்கு கண்காணித்து, தகவல்களை பதிவு செய்ய வேண்டும் (வடிவமைப்பு செய்ப்பணி புத்தகத்தை பயன்படுத்தவும்). பிறகு, அவர்களுடைய முடிவுகள், பரிந்துரைகளை, கண்டறிந்தவைகளை ஒரு அறிக்கை, தகவல் அட்டை, அல்லது பவர் பாயிண்ட் ப்ரஸண்டேஷன்(Power Point presentation) கொண்டோ அல்லது இவையெல்லாவற்றையும் உபயோகித்தோ, விளக்க வேண்டும்.
- செடி வளர சிறிது காலமாகும். திட்டமிடும் போது, மாணவர்கள் ஒரு கவனிப்பு தகவல் அட்டவணையை தயாரிக்க வேண்டும். மேலும், pH பாதுகாப்பு சுழற்சிக்கும், எல்லா மாணவர்களும் பங்கேற்க, ஒரு அட்டவணையை தயாரிக்க வேண்டும். குழுவின் ஒவ்வொரு மாணவரும், ‘பயிர் பாதுகாவலாராக’ பணியாற்றி பயிர்களுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்கின்றதா, தண்ணீரின் pH மட்டங்கள் முன்பே அமைத்ததை போல் உள்ளதா என்றும், பயிர்கள் இரு வாரங்களுக்குள் வளர்கிறதா என்று கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும்.
- சிகப்பு கோஸ் சுட்டியை உருவாக்குவதற்கான செயல்முறை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வகுப்பையும் கூட்டி இந்த விளக்கப்படத்தை காட்டவும் http://theplantdoctor.pbworks.com/f/Introduction+to+Hydroponics.ppt
இந்த படம் நீரியல் அதாவது தண்ணீரில் பயிர்களை வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தும். இந்த சமயத்தில், நீரியல் வளர்ப்பின் பயன்கள் குறித்து, pH மட்டத்தை கவனித்தில் கொண்டு, விவாதிக்கவும். ஆசிரியர்கள், தலைப்புக்கு பொருத்தமில்லாத அல்லது மாணவர்களுக்கு அவசியமில்லாத ஸ்லைடுகளை(Slides) விளக்காமல் விட்டுவிடலாம்.
பகுதி – 2 – pH சுட்டியின் துல்லியத்தன்மையை மதிப்பிடல்
- கண்ணாடி குவளையில் வினிகரை சேர்த்து மாணவர்கள் அமிலக்கரைசலை உருவாக்க வேண்டும்.
- மாணவர்கள் சிகப்பு கோஸ் pH சுட்டி துண்டுகளை கரைசலில் சேர்க்க வேண்டும். வண்ணம் மாறியவுடன், கரைசலின் pH மதிப்பை, pH வண்ண சார்ட்டை(Charts) (கையேட்டை பார்க்கவும்) கொண்டு, பதிவு செய்ய வேண்டும்.
- கரைசலின் pH மதிப்பை சிகப்பு கோஸ் சுட்டி மற்றும் ஆயத்த பாசிச்சாயத்தாளை (ஆசிரியரால் கொடுக்கப்பட்டது) கொண்டு மாணவர்கள் அளப்பார்கள். இரண்டு விதமான தகவல்களை ஒப்பிட்டு, தயாரிக்கப்பட்ட சிகப்பு கோஸ் சுட்டியின் துல்லியத்தன்மையை மதிப்பிடுவார்கள். இரண்டுக்குமிடையே வேறுபாடு அதிகமிருந்தால், குழுக்கள் ஆழ்ந்து சிந்தித்து, என்ன தவறு நடந்தது என்று கண்டுணர்ந்து, மீண்டும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
பகுதி – 3 – ஜாடிகளில் தேவையான pH மட்டம் பெற சோதனை மற்றும் மறுவடிவமைப்பு
- மாணவர்கள் மூன்று கண்ணாடி குவளைகள்/குடுவைகள்/கண்ணாடி டம்ளர்கள் - குறுகிய வாயையுடைய கலங்களை உபயோகிக்க வேண்டும்.
- கலங்களின் மீதி லேபிள்களை(Labels) ஒட்டவும் – அ, ஆ, இ (மார்க்கர்களையோ (Markers) அல்லது ஸ்டிக்கர்களையோ (Stickers) பயன்படுத்தவும்)
- மாணவர்கள் சோதனை செய்து, வினிகர் (Vinegar) மற்றும் ஆப்ப சோடா அளலில் மாற்றம் செய்யும் முறையை மறு வடிவமைப்பு செய்வார்கள். கலங்களின் pH மதிப்பில் மாறுதல்களை செய்து – கலம் அ வில் 5 க்கும் கீழ், ஆ வில் 7, மற்றும் கலம் இ வில் 9 க்கும் மேல் pH மதிப்பு இருக்கும் படி செய்ய வேண்டும்.
பகுதி - 4 – பயிரிட்டு வளர்ச்சியை கண்காணித்தல்
குழுக்கள் கொடுக்கப்பட்ட தண்டுகளை மூன்று லேபிள் ஒட்டப்பட்ட மூன்று கலங்களில் பயிரிட்டு (ஆசிரியர் ஒரே செடியின் தண்டுகளை எல்லா குழுக்களுக்கும் கொடுப்பார்), அவற்றை வேதியியல் சோதனை கூடத்திலோ அல்லது வகுப்பறையிலோ வைக்க வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களில், அடிப்படை கோட்பாடுகளை அறிமுகம் செய்த பிறகு, பரிசோதனையை மேற்கொள்ளல்-
- பயிர்களின் வளர்ச்சியையும், பல நிலைகளில் உள்ள pH மதிப்பையும் வடிவமைப்பு செய்ப்பணி புத்தகத்தில் கொடுக்கப்பட்ட அதற்கான அட்டவணையில் பதிவு செய்ய வேண்டும்.
- செய்ப்பணி தொடங்குவதற்கு முன் அமைக்கப்பட்ட pH மதிப்பை மூன்று கலங்களிலும் மாணவர்கள் பாதுகாக்க வேண்டும்.
பகுதி– 5 –அனுமானங்கள்,சுருக்கம் மற்றும் விளக்குதல்
- இரு வாரங்களுக்கு பிறகு, மாணவர்களுக்கு குழுவிற்குள் அவர்களாக பிரிந்து தாங்கள் புரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவும், அட்டவணைப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அனுமானங்கள் தொகுக்கவும், அதிகமான அமில/கார தன்மையால் தண்ணீர் மற்றும் மண்ணில் ஏற்படும் தாக்கங்கள் காரணிகள் குறித்து ஆய்வு செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டும்.
- சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு மாணவர்கள் பதிவு செய்வார்கள்.
- மனித இனம் மட்டுமல்லாமல், எல்லா உயிரினங்களின் மீதும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளை பட்டியலிடுவார்கள்.
- குழுக்கள் தகவல் அட்டைகளை விளக்கப்படங்களுடன் உருவாக்கி, தகுந்த சொற்றொடர்களுடன், நல்ல முறையில் விளக்க வேண்டும்.
- மொத்த செய்ப்பணி முறைகள் குறித்து கேள்விகளை கேட்டு, மாணவர்களை விளக்க வைத்து நிறைவு செய்யவும். K-W-H-L ல் L நெடு வரிசையை மாணவர்களை நிரப்ப சொல்லவும்
- ஆசிரியர்கள் முன்னிலையில் ஒரு கேள்வி பதில் சுற்று நடத்தப்பட வேண்டும்.
- முடிவாக, மாணவர்களை செய்ப்பணி புத்தகத்தில் கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளிக்க கூறவும்
Comments
Cool keep it up sattaking
Cool keep it up sattaking