அறிமுகம் -
சுற்று சூழலுக்கும், வாழ்க்கைக்கும் பயிர்களின் முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்களின் முன் அறிவை தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயம் மற்றும் நீர்பாசனம் குறித்த வார்த்தைகளை நினைவுக்கூறுவதற்கு விவாதங்களை தொடங்குதல். பயிர் வளர்ச்சி/உற்பத்தியை அதிகப்படுத்து எப்படி என்றும் அதற்கான தேவை குறித்தும் மாணவர்களின் சிந்தனையை ஒரு குழு விவாதத்தின் மூலம் தூண்டி விட வேண்டும். இதை போன்ற ஒரு சில கேள்விகளை கேட்க வேண்டும்
- ஒரு நாள் நீங்கள் விழித்தெழுந்தவுடன் பூமியில் தாவரங்களே இல்லை என்ற நிலை உள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? ஏன்?
- நீங்கள் உண்ணும் உணவு உங்கள் தட்டுக்கு வருவது எப்படி?
- மனித வரலாறு முழுவதும் விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது ஏன்? எப்படி?
- பொறியியலும், தொழில் நுட்பமும் விவசாய துறைக்கு வரமா/சாபமா?
விவாதத்தின் முடிவில் இந்த வீடியோவை காண்பிக்கவும்.
https://www.youtube.com/watch?v=1gLa5EWn9OI
இது மாணவர்களின் முன் அறிவுக்கு உதவும்.
வகுப்பை ஆறு குழுவாக பிரித்து - ஒவ்வொரு குழுவுக்கும் - K-W-H-L சார்ட்டை வழங்கவும். ஒவ்வொரு குழுவையும், பயிர் வளர்ச்சி மற்றும் மேம்படுத்துதல் குறித்து ‘K', 'W', மற்றும் ‘H' நெடு வரிசையை நிரப்ப சொல்லவும். K-W-H-L சார்ட்டை சரிபார்த்து, ஒவ்வொரு குழுவுடனும் விவாதிக்கவும்.
மாணவர்களுக்கு பள்ளிக்கூட தோட்டத்தை வடிவமைத்து, பல்வேறு முறைகளை கையாண்டு உகந்த வளர்ச்சியை பெற வேண்டும் என தெரிவிக்கவும். ஒப்பீட்டு ஆய்வுக்காக, ஒரே அளவான இடு பொருட்களை கொண்டு, மிகையாக எந்த பொருட்களையும் சேர்க்காமல், ஒரே இனத்தை சேர்ந்த பயிர்களை மாணவர்கள் பயிரிட வேண்டும்
- கருவிகளையும், பொருட்களையும் ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கவும்.
- "பள்ளியின் அருகில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக உற்பத்தியை தரும் தோட்டத்தை உருவாக்கி, அதை தரிசு நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிருடன் ஒப்பிட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தவும்.
- மாணவர்கள் பள்ளியில் இருக்கும் ஒரு தோட்டத்தை ஆய்வு செய்தல், திட்டமிடல், வடிவமைத்தல், உருவாக்குதல், மதிப்பிடல் போன்றவற்றில் அறிவு பெறுவதற்கு நேரம் செலவிட வேண்டும்.
தங்கள் கருத்துடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் அறிவை ஒருங்கிணைக்க வேண்டும்:
விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணித தலைப்புகளை புரிந்துகொள்வதற்கான தகவல்களை அளிக்கலாம்.) இந்த தகவல்களை மாணவர்கள் செயல் திட்ட வடிவமைப்பின் போது/குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வு காணும் போதும் பயன்படுத்தலாம்.
விஞ்ஞானத்துடன் தொடர்புடைய தலைப்பு – உயிரியல் – பயிர்களின் அமைப்பை ஆய்வு செய்தல், பயிர்களின் செயல்பாடு, வேளாண் பொறியியல், உணவு, பயிர்களின் ஆற்றல், எரு, உரம், போன்றவை. (வேதியியல்) – மண்ணின் கார அமிலத்தன்மை (pH) மற்றும் வேளாண் உற்பத்தியில் அதன் தாக்கம். நிலவியல் – நிலத்தின் அமைப்பு/தன்மை குறித்து ஆய்வு செய்தல், அவற்றின் தண்ணீர் கொள்ளும் திறன், மேலும் இந்த காரணிகள் பயிர் வளர்ச்சி மற்றும் பொதுவான உற்பத்தியை தீர்மானிப்பதை குறித்து ஆய்வு செய்தல்
ELA (ஆங்கில அறிவு திறனை வளர்த்தல்) உடன் இணைக்கப்பட்ட தலைப்பு –புதிய வார்த்தைகள் அதன் அர்த்தங்களை கொண்டு சொற்பொருள் அறிவை மேம்படுத்துதல், அனுமானங்கள், ஆய்வு பற்றி சுருக்கமாக விளக்குதல்.
"கணிதம், வடிவியல், மற்றும் அளவீடுகள் தொடர்புடைய தலைப்புகள் தோட்டத்தை வடிவமைக்கவும், புற எல்லையில் வேலி அமைக்கவும் தேவையான பொருட்களை அளவிடவும் பயன்படும். புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு வளர்ச்சியை கணக்கிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நிலம் பின்னப்படுத்தப்படுகிறது. நல்ல உற்பத்தியை பெற மண், உரம், பூச்சி கொல்லி தூள் எல்லாம் சம அளவில் இருக்க வேண்டும்..